எங்களைப் பற்றி

பிப்ரவரி 5, 2021 அன்று தொடங்கிய ஒரு சிறு நடை, இன்று ராமேஸ்வரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள சமூகமாக வளர்ந்துள்ளது.

மலையடிவாரத்தில் டைகர் கிளப் உறுப்பினர்கள்

எங்கள் கதை

டைகர் ஹெல்த் & வெல்த் கிளப் பிப்ரவரி 5 ம் நாள் 2021 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெரியவர்கள், முதியோர்கள் என அனைத்து வயதினரும் மொத்தம் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் டைகர் குழுவில் இணைந்து பயனடைந்துள்ளனர்.

இன்று ராமேஸ்வரம் தலைமையிடத்திலிருந்து, தினசரி இணைய வழி சந்திப்புகள், பயிற்சி முகாம்கள், மரம் நடும் பணிகள் மற்றும் அஸ்தி சேவை மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள உறுப்பினர்களை இணைக்கிறோம்.

மனம், புத்தி, உடல் மூன்றும் சமநிலையில் இருந்தால் வாழ்க்கை பிரகாசிக்கும்.

ஒரு தனி மனிதனின் தொடர்ச்சியான ஆரோக்கியமும், பொருளாதாரமும் இவ்வுலகை மாற்றும்.

டாக்டர் டைகர் தேன்கூடு பிரபாகரன்

நிறுவனர் & வழிகாட்டி

டைகர் குழுவை வழிநடத்தி, தினசரி பயிற்சிகள், முகாம்கள் மற்றும் சமூகப் பணிகளை முன்னெடுத்துச் செல்கிறார்.

இறை வணக்கம்

என் வாழ்க்கையின் நம்பிக்கையாய் இருக்கும் இறைவா..

  • நான் சேவை செய்யும் இந்த அமைப்பே நீ வாழும் இடமென எண்ணுகிறேன்..
  • நான் தினமும் செய்யும் பணியே எனது கடமை என நம்புகிறேன்..
  • எனது உடலை கண்ணும் கருத்துமாய் பாதுகாப்பதே எனது பொறுப்பு என உணர்கிறேன்..

நன்றி இறைவா..

உங்கள் முதல் அடி மிக எளிது.

வீட்டிலிருந்தே தினசரி பயிற்சியில் சேருங்கள், அல்லது இன்றே டைகர் குடும்பத்தின் உறுப்பினராகுங்கள்.