ஆரோக்கியப் பயிற்சிகள்
உடலுக்கும் மனதுக்குமான எளிய வழிகாட்டல் பயிற்சிகள்: 8 வடிவ நடை, தினசரி இணைய வழி சந்திப்புகள், நேரடிப் பயிற்சி முகாம்கள்.
ஏன் 8 வடிவம்?
உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டும் பயிற்சி தரக்கூடியதாக இருக்க கூடாது. மனதுக்கும் பயிற்சி தரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பயிற்சிகளின் மூலம் கிடைக்கும் ஆரோக்கியமும் பலனளிக்கும்.
நமது உடலில் இருக்கும் வர்மப்புள்ளிகள் அதிகளவு உள்ளங்காலில் நிறைந்திருக்கின்றன. இந்த 8 வடிவ நடைப் பயிற்சியை வெற்றுக் காலில், கூழாங்கற்கள் மீது செய்யும் போது அந்தப் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது.
“நடக்கறீங்களா நல்லது.. 8 வடிவத்தில் நடக்கறீங்களா இன்னும் இன்னும் நல்லது. அழகான வடிவம், கூர்மையான பார்வை, வற்றாத இளமை, ஆரோக்கியமான உடல் இப்படி எல்லாமே கிடைக்கும் என்கிறார்கள் பயிற்சி நிபுணர்கள்.”

உறுப்பினர்கள் உணரும் பலன்கள்
- 01உச்சி முதல் உள்ளங்கால் வரை முழு உடல் நலம்
- 02பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு உதவுகிறது
- 03ஞாபக சக்தி அதிகரிக்கிறது
- 04இளமையை மீட்டுத் தருகிறது
- 05உள்ளுறுப்புகளை சீராக இயக்குகிறது
- 06மனம், புத்தி, உடல் — மூன்றும் சமநிலையில்
எங்கள் ஆரோக்கியப் பயிற்சிகள் மருத்துவ சிகிச்சைக்கு மாற்று அல்ல. உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும்.
எப்படித் தொடங்குவது
- 1
8-ஐ வரையுங்கள்
தரையில் 8 வடிவத்தை சாக்பீஸ் அல்லது மார்க்கரால் வரையுங்கள்.
- 2
வெறுங்காலில் நடங்கள்
காலணி இல்லாமல், 8 வடிவக் கோட்டின் மீது கவனத்துடன் நடங்கள்.
- 3
எங்களுடன் இணையுங்கள்
தினமும் இணைய வழி வழிகாட்டல் சந்திப்பில் குழுவுடன் சேர்ந்து நடங்கள்.
எங்கு செய்யலாம்?
- மண் தரை
- சிமெண்ட் தரை
- வீட்டின் அறை
- மொட்டை மாடி
- தோட்டம்
- அருகிலுள்ள மைதானம்
தினசரி இணைய வழி சந்திப்புகள்
ஒவ்வொரு நாளும் யூடியூப் வழியாக வழிகாட்டல் பயிற்சிகள். உங்கள் வீட்டிலிருந்தே எங்களுடன் இணையுங்கள்.
- 01
இன்றைய நிகழ்வு — 8 நடை பயிற்சி
இன்றைய 8 நடை பயிற்சி நிகழ்வு எங்கள் யூடியூப் சேனலில் உள்ளது. எட்டு நடை பயிற்சி செய்து பயன்பெறுவோம்.
யூடியூபில் காண(புதிய தாவலில் திறக்கும்) - 02
9 மூட்டு பயிற்சி & தோப்புக்கரணம்
உடலின் மந்தமான மனநிலை நீங்கி, புதுவித ஊக்கமும் உற்சாகமும் கிடைக்கிறது. தோப்புக்கரணத்தில் காது நுனிகளைத் தொடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கிறது.
யூடியூபில் காண(புதிய தாவலில் திறக்கும்) - 03
உள்ளுறுப்பு பயணம் & பண ஈர்ப்பு விதி
தினமும் கண்களை மூடி ஒவ்வொரு உள்ளுறுப்பையும் உணர்ந்து நன்றி செலுத்தினால் அவை நன்கு இயங்கும்.
யூடியூபில் காண(புதிய தாவலில் திறக்கும்) - 04
மனப்பட காட்சி
நாம் சாதிக்க வேண்டிய இலக்குகளை ஏற்கனவே அடைந்தது போல மனதில் காண்பது நேர்மறை எண்ணங்களை உருவாக்கி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
யூடியூபில் காண(புதிய தாவலில் திறக்கும்)
தேன்கூடு சேனல் — ஒரு அறிமுகம்
புதிய பயிற்சிகளைத் தவறவிடாமல் இருக்க எங்கள் யூடியூப் சேனலைப் பின்தொடருங்கள்.
பயிற்சி & முகாம்கள்
எங்கள் பயிற்சிப் பட்டறைகள் 8 வடிவ நடையையும் தினசரி பயிற்சிகளையும் முறையாகக் கற்றுத்தருகின்றன; உறுப்பினர்கள் வீட்டிலும் நம்பிக்கையுடன் தொடரலாம்.
இயற்கைச் சூழலில் நடைபெறும் முகாம்கள் குடும்பங்களை பயிற்சி, உணவு, கொண்டாட்டத்திற்காக ஒன்றிணைக்கின்றன.
- 8 வடிவ நடையின் சரியான முறை குறித்த பட்டறைகள்
- இயற்கைச் சூழலில் தங்கிப் பயிலும் முகாம்கள்
- அனைத்து வயதினருக்குமான குடும்பக் குழு அமர்வுகள்
- தொடர் பயிற்சியைக் கொண்டாடும் விருது விழாக்கள்




உங்கள் முதல் அடி மிக எளிது.
வீட்டிலிருந்தே தினசரி பயிற்சியில் சேருங்கள், அல்லது இன்றே டைகர் குடும்பத்தின் உறுப்பினராகுங்கள்.





